×

கோவாவின் 2வது விமான நிலையம் மோடி இன்று திறந்து வைக்கிறார்; மொத்த ஏர்போர்ட்டுகளின் எண்ணிக்கை 140 ஆனது

புதுடெல்லி: கோவாவில் உள்ள மோபா சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் மோடி இன்று வைக்க உள்ளார். கோவா மாநிலத்தில் தபோலிம் விமான நிலையம் உள்ள நிலையில், இம்மாநிலத்தில் மோபா சர்வதேச விமான நிலையம் அமைக்க திட்டமிட்டு கடந்த 2016 நவம்பரில் அடிக்கல் நாடப்பட்டது. இந்த விமான நிலைய பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில், இன்று பிரதமர் மோடி திறந்து வைத்து நாட்டு அர்ப்பணிக்கிறார். தபோலிம் விமான நிலையத்தை விட பல நவீன வசதிகளுடன் மோபா விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. கடந்த நவம்பரில் அருணாச்சல் பிரதேசத்தில் இட்டாநகர் பசுமை விமான நிலையம், ஜூலையில் தியோகர் விமான நிலையம், கடந்த அக்டோபரில் புகழ்பெற்ற புத்த தலமான குஷிநகர் சர்வதேச விமான நிலையம் என அடுத்தடுத்து விமான நிலையத்தை திறந்து வைத்தார். மேலும்,கடந்த  ஆண்டு நவம்பரில் உத்தரபிரதேசத்தின் ஜெவாரில் நொய்டா சர்வதேச விமான  நிலையத்திற்கு அடிக்கல் நாட்டினார். இதன் மூலம், 2014ல் பிரதமர் மோடி பிரதமராக பதவியேற்றபோது, நாட்டில் செயல்பாட்டு விமான நிலையங்கள் 74 மட்டுமே இருந்தது. தற்போது இரு மடங்காக உயர்ந்து, 140 ஆக அதிகரித்து உள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் 220 விமான நிலையங்களை மேம்படுத்தி செயல்படுத்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது….

The post கோவாவின் 2வது விமான நிலையம் மோடி இன்று திறந்து வைக்கிறார்; மொத்த ஏர்போர்ட்டுகளின் எண்ணிக்கை 140 ஆனது appeared first on Dinakaran.

Tags : Modi ,Goa's ,New Delhi ,Moba International Airport ,Goa ,Dabolim ,airport ,Dinakaran ,
× RELATED மனித பிறவியே இல்லை என்பதா?...