×

ரீ ரிலீசாகும் தமிழ் படங்கள்

சென்னை: தமிழில் பிரமாண்டமான படங்களை உருவாக்கி, தயாரிப்பாளர்களில் ஸ்டார் அந்தஸ்து பெற்றவர், கே.டி.குஞ்சுமோன். அவர் தயாரித்த ‘சூரியன்’, ‘ஜென்டில்மேன்’, ‘காதலன்’, ‘காதல் தேசம்’ போன்ற படங்கள் விநியோகஸ்தர்களுக்கு நல்ல லாபம் கொடுத்தன. நேற்று முன்தினம் ரஜினிகாந்த் நடித்த ‘பாபா’ படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கே.டி.குஞ்சுமோன் தயாரித்த ‘காதல் தேசம்’ படத்தை முதற்கட்டமாக நேற்று முன்தினம் தெலுங்கில் வெளியானது. இளைஞர்களை காதலில் கிறங்கடித்த இப்படத்தைப் புதுப்பித்து, தெலுங்கில் ‘பிரேமதேசம்’ என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. ஆந்திரா, தெலங்கானாவில் 200க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ள இதில் வினீத், அப்பாஸ், தபு நடித்துள்ளனர். கதிர் இயக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். இதேபோல் பாபா படத்தை தொடர்ந்து ரஜினியின் சிவாஜி படத்தை ஏவிஎம் நிறுவனம் ரீ ரிலீஸ் செய்கிறது. ஸ்ரேயா, சுமன், விவேக், லிவிங்ஸ்டன் உள்பட பலர் நடித்துள்ளனர். ஷங்கர் இயக்கிய இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தார்….

The post ரீ ரிலீசாகும் தமிழ் படங்கள் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,K.D.Kunjumon ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...