×

அக்‌ஷய் குமாருக்கு வில்லனாகும் பிருத்விராஜ்

மும்பை: பாலிவுட்டில் அக்‌ஷய் குமாருக்கு வில்லனாக நடிக்க உள்ளார் பிருத்விராஜ். மலையாள நடிகரான பிருத்விராஜ், தமிழில் மொழி, கனா கண்டேன், நினைத்தாலே இனிக்கும், ராவணன், காவியத் தலைவன், அபியும் நானும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்தியில் 3 படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில் பிரபாஸ் நடிக்கும் சலார் படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இதையடுத்து இந்தி படத்திலும் வில்லனாக நடிக்க தேர்வாகியுள்ளார். அமிதாப் பச்சன், கோவிந்தா நடித்த படம் படே மியான் சோட்டே மியான். இந்த படம் அதே பெயரில் ரீமேக் ஆகிறது. அமிதாப் பச்சன் வேடத்தில் அக்‌ஷய் குமார், கோவிந்தா வேடத்தில் டைகர் ஷெராப் நடிக்கிறார். அலி அப்பாஸ் ஜாபர் இயக்குகிறார். இதில் வில்லனாக நடிக்க பிருத்விராஜ் ஒப்பந்தமாகியுள்ளார். …

The post அக்‌ஷய் குமாருக்கு வில்லனாகும் பிருத்விராஜ் appeared first on Dinakaran.

Tags : Prithviraj ,Akshay Kumar ,Mumbai ,Bollywood ,Kana Kanden ,
× RELATED மும்பை – சூரத் வழித்தடத்தில் ரயில் சேவை பாதிப்பு