×

வங்கதேச பிரதமருக்கு எதிராக 2 லட்சம் பேர் போராட்டம்

தாகா: வங்கதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசினா தலைமையிலான அவாமி லீக் கட்சி ஆட்சி நடந்து வருகிறது. 2024ம் ஆண்டு வரை பதவிக்காலம் உள்ளது. ஆனால் ஷேக் ஹசீனா பதவி விலகி இடைக்கால பிரதமரை நியமித்து தேர்தலை நடத்த வலியுறுத்தி வங்கதேச தேசிய கட்சி சார்பில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது. கடந்த புதன்கிழமை நடந்த போராட்டத்தில் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார். நேற்று தாகாவில் உள்ள கோலாப்பாக் பகுதியில் எதிர்க்கட்சிகள் சார்பில் பிரமாண்ட பேரணி நடந்தது. இதில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர். இந்த பேரணியில் ‘ஓட்டு திருடும் ஷேக் ஹசீனா பதவி விலகு’ என்று கோஷம் எழுப்பப்பட்டது. இதில் வங்கதேச தேசிய கட்சியை சேர்ந்த 7 எம்பிக்கள் பதவி விலகினார்கள். அவர்கள் கூறும்போது ஏற்கனவே  ராஜினாமா கடிதத்தை நாடாளுமன்ற செயலாளருக்கு அனுப்பி விட்டதாக தெரிவித்தனர். இந்த பேரணியால் தாகா முழுவதும் ஸ்தம்பித்தது. போக்குவரத்து முடங்கியது. பாதுகாப்பிற்காக 20 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டனர். பேரணியை தடை செய்யும் நடவடிக்கையாக மூத்த எதிர்க்கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். குறிப்பாக பிஎன்பி கட்சி பொதுச்செயலாளர் மிர்சா பக்ருல் இஸ்லாம் ஆலம்கிர் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.   இதனால் தாகாவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது….

The post வங்கதேச பிரதமருக்கு எதிராக 2 லட்சம் பேர் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Prime Minister of ,Bangladesh ,Dhaka ,Awami League ,Sheikh Hasina ,Dinakaran ,
× RELATED மாயமான வங்கதேச எம்.பி.அன்வருல்...