குடியரசு தினத்தன்று சிவகார்த்திகேயன், விஷால் படங்கள் வெளியீடு: படக்குழுவினர் தகவல்

நடிகர் விஷாலின் வீரமே வாகை சூடும் படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு அறிவித்திருக்கிறது. நடிகர் விஷால் நடிப்பில் சமீபத்தில் எனிமி வெளியானது. மேலும் வீரமே வாகை சூடும் படத்தில்நடித்து முடித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குநர் து.ப சரவணன் இயக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹயாதி அறிமுகமாகிறார். யோகிபாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, மலையாள நடிகர் பாபுராஜ் உள்ளிடோர் நடித்துள்ளார்கள். படம் வரும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று வெளியாகிறது என்று படக்குழு தற்போது அறிவித்திருக்கிறது.

சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் லைகா நிறுவனம் மற்றும் சிவகார்த்திகேயன் நிறுவனம் தயாரிப்பில்  நடிகர் சிவக்கார்த்திகேயன் டான் படத்தில் நடித்து உள்ளார். மேலும் இந்த படத்தில் முன்னணி காமெடி நடிகர் சூரி, முனீஸ்காந்த், பால சரவணன், காளி வெங்கட், குக் வித் கோமாளி ஷிவாங்கி, புகழ், சமுத்திரகனி என பலர் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிரூத் இசையமைத்துள்ளார். இந்த நிலையில், படம் வரும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று வெளியாகிறது என்று படக்குழு அறிவித்திருந்தது. அதே தினத்தில் சிவகார்த்திகேயனின் விஷால் நடிக்கும் வீரமே வாகை சூடும் படமும் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories:

More