டெல்லியில் படப்பிடிப்புக்கு சென்றபோது கார் விபத்தில் நடிகை படுகாயம்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்

புதுடெல்லி : டெல்லியில் நடந்த படப்பிடிப்புக்கு காரில் சென்ற போது நடிகை அர்ஷி கான் விபத்தில் சிக்கினார். அவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியதாக கூறப்படுகிறது. பாலிவுட் மற்றும் டிவி நடிகை அர்ஷி கான் நேற்று டெல்லியின் மால்வியா நகர் பகுதி வழியாக காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது கார் சிவாலிக் சாலையில் விபத்துக்குள்ளானது. படுகாயமடைந்த அர்ஷி கான், அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையே விபத்து குறித்து டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். படப்பிடிப்புக்கு சென்ற போது கார் விபத்தில் சிக்கியதாகவும், அதிர்ஷ்டவசமாக அர்ஷி கான் உயிர்தப்பியதாகவும் கூறப்படுகிறது.

தற்போது சிகிச்சை பெற்று வரும் அர்ஷி கான் விரைவில் குணமடைய அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகிறார்கள். கடந்த சில நாட்களாக பிரபல மல்யுத்த வீரர் தி கிரேட் காளியிடம் மல்யுத்த பயிற்சி பெற்று வருகிறார். பாலிவுட் படங்களிலும், சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். தனது மல்யுத்த பயிற்சி தொடர்பான பல வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். குறிப்பாக அவர் மல்யுத்த வீரர் காளியுடன் நடனமாடிய வீடியோ ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

More