தெலுங்கு வெப்தொடரில் பிரியா

ஆங்கிலத்தில் ‘சைலன்ட் ஸ்கிரீம்’, தமிழில் சிம்பு நடித்த ‘அலை’, மாதவன் நடித்த ‘யாவரும் நலம்’, சூர்யா நடித்த ‘24’ ஆகிய படங்களை இயக்கியவர், விக்ரம் குமார். தெலுங்கில் ‘இஷ்டம்’, ‘இஷ்க்’, ‘மனம்’, ‘ஹலோ’, ‘கேங் லீடர்’, இந்தியில் ‘13 பி’ ஆகிய படங்களை இயக்கினார். தற்போது ‘தேங்க்யூ’ என்ற தெலுங்கு படத்தை இயக்குகிறார். இதில் ‘மனம்’ படத்தில் மறைந்த பழம்பெரும் நடிகர் நாகேஸ்வர ராவ், அவரது மகன் நாகார்ஜூன், அவரது மகன் நாக சைதன்யா நடிப்பில் மூன்று தலைமுறை நடிகர்களை இணைத்து இயக்கினார். இந்நிலையில், ‘தேங்க்யூ’ படத்தை முடித்துவிட்டு தெலுங்கு வெப்தொடர் ஒன்றை இயக்க முடிவு செய்துள்ளார். இதில் நாக சைதன்யா, அவரது ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கின்றனர்.

Related Stories: