×

நடிகர் பார்த்திபன் பேஸ்புக் முடக்கம்

சென்னை: தமிழில் பார்த்திபன் இயக்கி நடித்து தேசிய விருது பெற்ற படம், ‘ஒத்த செருப்பு சைஸ் 7’. தற்போது இப்படம் அவரது இயக்கத்தில் இந்தியில் ரீமேக் ஆகிறது. அபிஷேக் பச்சன் நடிக்கிறார்.
மேலும், ஒரே ஷாட்டில் முழுவதுமாக படமாக்கப்பட்ட ‘இரவின் நிழல்’ என்ற படத்தையும் பார்த்திபன் இயக்கியுள்ளார். இந்நிலையில், நேற்று தனது பேஸ்புக் பக்கம் சில மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவரது டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘என் முகநூல் பக்கம் ஹேக் செய்யப்பட்டிருக்கிறது. அறிவுள்ளவன் படமெடுக்கலாம். அறிவு மிகுந்தவர் ரசிகராகலாம். ஆனால், அறிவுக்கே பிறந்த சில இனிய எதிரிகள் ஹேக் செய்கிறார்கள். அதை எதிர்கொண்டு, அந்த அரக்கர்களை வதம்கொள்ள சற்றே நேரம் தேவை. அதுவரை அவ்விளம்பரங்களுக்காக என்னை மன்னியுங்கள்’ என்று கூறியுள்ளார்.

Tags : Parthiban ,
× RELATED சாலை விபத்தில் லாரி டிரைவர் பலி