×

முருங்கையை நம்பும் அதுல்யா

அதுல்யா ரவிக்கு அடிக்கடி போட்டோசெஷன் நடத்துவது என்றால் அல்வா சாப்பிடுவது மாதிரி. வீட்டில் ஏராளமான புது உடைகள் மற்றும் அணிகலன்களை வாங்கிக் குவித்திருக்கும் அவர், திடீரென்று அவுட்டோரில் ஒரு லொக்கேஷனை தேர்வு செய்து போட்டோசெஷன் நடத்துவார். உடனே அந்த போட்டோக்களையும், வீடியோக்களையும் தனது சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டு, ரசிகர்கள் தன்னை மறந்துவிடாத அளவுக்கு விளம்பரப்படுத்துவார்.

தமிழில் ‘காதல் கண் கட்டுதே’, ‘கதாநாயகன்’, ‘ஏமாலி’, ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’, ‘அடுத்த சாட்டை’, ‘கேப்மாரி’, ‘நாடோடிகள் 2’ ஆகிய படங்களில் நடித்தார். தற்போது சாந்தனுவுடன் ‘முருங்கைக்காய் சிப்ஸ்’, ஜெய்யுடன் ‘எண்ணித்துணிக’, சிபிராஜூடன் ‘வட்டம்’, அமலா பால் தமிழ் மற்றும் தெலுங்கில் தயாரித்து நடிக்கும் ‘கடாவர்’ ஆகிய படங்களில் நடிக்கும் அதுல்யா ரவி, ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ படம் தனக்கு திருப்புமுனையாக அமையும் என்று நம்புகிறார்.

Tags : Athulya ,
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர் மற்றும்...