தெலுங்கு நடிகர் சங்கத்திலிருந்து பிரகாஷ்ராஜ் விலகல்

சென்னை: தெலுங்கு நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பிரகாஷ்ராஜ் தோல்வி அடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட நடிகர் மோகன்பாபுவின் மகன் விஷ்ணு மன்ச்சு வெற்றி பெற்றார். தேர்தல் தோல்வியை தொடர்ந்து பிரகாஷ்ராஜ் தெலுங்கு நடிகர் சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இது தொடர்பாக பிரகாஷ்ராஜ் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: 21 வருடங்களாக இந்த சங்கத்தில் இருக்கிறேன்.

ஆனால், என்னை வெளியிலிருந்து வந்த ஆள், விருந்தினர் என்று அடையாளப்படுத்தியே தேர்தலில் தோற்கடித்திருக்கிறார்கள். எதிர் தரப்பில் ஜெயிப்பதற்கு அவர்கள் அதை சொன்னாலும் அவர்களுக்கு வாக்களித்தவர்களும் அதையே ஆதரிப்பதாக தெரிகிறது. இந்த சூழலில், நான் என் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறேன். ஆனால், நான் தொடர்ந்து தெலுங்கு திரைப்படங்களில் நடிப்பேன்.

Related Stories:

More