தளபதி 67…. மீண்டும் இணையும் நடிகர் விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி?

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஜனவரி மாதம் வெளியான மாஸ்டர் திரைப்படம் அனைவரிடமும் பெரிய வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. இப்படத்தை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கமலின் விக்ரம் படத்தை இயக்க சென்றுவிட்டார். இப்படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

மேலும் தளபதி விஜய் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார், அதனை தொடர்ந்து வம்சி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் தற்போது தளபதி 67 குறித்த தகவல் ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ஆம், மீண்டும் லோகேஷ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கவுள்ளார். இந்த கூட்டணி மீண்டும் தளபதி 67 படத்திற்காக இணையும் என தகவல்கள் பரவி வருகிறது.

Related Stories:

More
>