×

வன விலங்குகளை வேட்டையாட பயன்படுத்திய 2,400 துப்பாக்கிகள் ஒப்படைப்பு

இட்டாநகர்: அருணாச்சலப் பிரதேசத்தின் மொத்த பரப்பளவில் 80 சதவீதம் வனப்பகுதி  என்பதால், அங்குள்ள மக்கள் சிலர் துப்பாக்கிகளை பயன்படுத்தி வருகின்றனர்.  அதனால் அவ்வப்போது துப்பாக்கி சூடு சம்பவங்களும், விலங்கினங்களை  வேட்டையாடுதலும் அதிகமாக நடக்கிறது. இந்நிலையில் அம்மாநில வனம் மற்றும்  சுற்றுச்சூழல் துறை சார்பில், வனவிலங்குகளின் எண்ணிக்கை குறைவதைக்  கட்டுப்படுத்த ‘ஏர்கன் சரண்டர் அபியான்’ என்ற வெகுஜன திட்டத்தை கடந்தாண்டு  மார்ச்சில் கொண்டு வந்தது. அப்போதிருந்து, வேட்டையாட பயன்படுத்திய ஏர்கன்  மற்றும் பிற ஆயுதங்களை பொதுமக்கள் அரசிடம் ஒப்படைத்து வருகின்றனர். அந்த வகையில் ‘ஏர் கன் சரண்டர் அபியான்’ திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து, தற்போது வரை (டிச. 7) 2,400க்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களை பொதுமக்கள் அதிகாரிகளிடம் ஒப்படைத்து உள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது….

The post வன விலங்குகளை வேட்டையாட பயன்படுத்திய 2,400 துப்பாக்கிகள் ஒப்படைப்பு appeared first on Dinakaran.

Tags : Itanagar ,Arunachal Pradesh ,
× RELATED அருணாச்சலப்பிரதேசத்தில் சீன எல்லையை...