200 கோடி பண மோசடி விவகாரம்: அமலாக்கத்துறை கஸ்டடியில் நடிகை: டெல்லி நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: 200 கோடி பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட லீனா மரியா பால் மற்றும் அவரது கணவரை அமலாக்கத்துறை கஸ்டடியில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. தனியார் நிறுவன விளம்பரதாரரும், தொழிலதிபருமான சிவிந்தர் மோகன் சிங்கின் மனைவி அதிதி சிங் என்பவரிடம், 200 கோடி மிரட்டி பணம் பறித்த வழக்கில் நடிகை லீனா மரியா பால் மற்றும் அவரது கணவர் சுகேஷ் சந்திரசேகரை அமலாக்கத்துறை கைது செய்தது. அவர்களை 3 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதுகுறித்து அமலாக்கத்துறை வட்டாரங்கள் கூறுகையில், ‘தொழிலபதிபர் சிவிந்தர் மோகன் சிங்கின் மனைவி அதிதி சிங்கிடம் 200 கோடி மிரட்டி பணம் பறித்த குற்றச்சாட்டில், நடிகை லீனா மரியா பால் மற்றும் அவரது கணவர் சுகேஷ் சந்திரசேகர் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சிறப்பு நீதிபதி அனில் ஆன்டில் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தம்பதியரை 3 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி கொடுத்துள்ளது. குற்றம்சாட்டப்பட்ட சுகேஷ் சந்திரசேகர், தனது 17 வயதிலிருந்தே பல்வேறு மோசடி வழக்கில் தொடர்புடையவராக இருந்துள்ளார். இவர் மீது பல எப்ஐஆர்கள் உள்ளன. தற்போது டெல்லி ரோஹிணி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்’ என்றார்.

Related Stories:

More
>