×

இருளில் வாழும் நாயகன்: தமிழில் முதல் லெஸ்பியன் கதை

ஹாலிவுட், பாலிவுட் படங்களில் தான் பெண்கள், பெண்களை பாலியல் ரீதியாக விரும்பும் லெஸ்பியன் கதைகள் அதிகமாக வெளிவரும், இப்போது தமிழிலும் வெளிவரத் தொடங்கி உள்ளது. தற்போது தயராகி உள்ள படம் அந்தகா சமீபத்தில் இதன் டிரெய்லர் பார்க்க முடிந்தது. கூட்டமாக ஒரு இருட்டு பங்களாக்குள் நுழையும் இளசுகளின் கேங் அவரவர்களுக்கே உரிய ஜாலி, கேலி மோட் என விளையாண்டுக் கொண்டிருக்க, திடீரென பவர் கட், டார்ச் லைட் சகிதம் தேடல், தொடர்ந்து நோட்டம் விடும் வாலிபரின் பாலியல் துன்புறுத்தல்கள் என டிரெய்லர் சற்றே நம்மை அசைக்கிறது.

கந்தா எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் புதுமுகங்களை வைத்து இயக்குநர் ஜேம்ஸ் கிரண். ஜி இயக்கியுள்ளார். ரியாஸ், மனோஜ், ஜேம்ஸ் கிரண், ஆஷிகா, ஜெனிபர் ரேச்சல், பூஜா ஷர்மா ஆகியோர் முக்கிய தாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். செந்தமிழ் இசையமைத்துள்ளார், பிரசாந்த் கௌடா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

படம் பற்றி இயக்குநர் கிரண்.ஜி. பேசுகையில்: ’அந்தகா’ என்றால் சமஸ்கிருதத்தில் இருளின் அரசன் என்று பொருள். இந்த படத்தில் வில்லன் இருட்டிலேயே இருப்பார். ஹாரர் காமெடி பாணியில் பயணிக்கும் இப்படம் ஒரு சைக்கோ திரில்லராக இருக்கும். அவற்றின் ஊடாக ஒரு லெஸ்பியன் தம்பதிகளின் கதையும் இருக்கிறது. அதன் வாயிலாக லெஸ்பியன் பெண்களின் உணர்வுகளையும் படத்தில் பேசி இருக்கிறோம். ஒரு சராசரியான நபராக இருக்கும் மனிதன், தான் விரும்பிய சிறிய விசயங்களை கூட அடைய முடியாத போது, அதை அடைய, எதையும் செய்யலாம் என்று முயற்சி செய்கிறான். அதன் விளைவு சைக்கோவாக மாறுகிறான். அப்படியான ஒரு மனிதனின் கதை தான் இந்த படம். என்னும் ஜேம்ஸ் கிரண் இப்படத்தில் அவரே ஹீரோ மற்றும் வில்லனாக நடித்திருக்கிறார். சென்னையின் ஈ.சி.ஆர் பகுதிகளில் எடுக்கப்பட்டிருக்கும் படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

Tags :
× RELATED வரலட்சுமியின் பான் இந்தியா படம் மே 3ம் தேதி ரிலீஸ்