×

தொழிலதிபர் சென்ற கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

சென்னை: குன்றத்தூர் அடுத்த நல்லூர் புதுப்பேடு பகுதியை சேர்ந்தவர் சங்கர் (33), தொழிலதிபர் . நேற்று முன்தினம்  பெருங்களத்தூரில் உள்ள உறவினர் சுபநிகழ்ச்சிக்கு சென்றவர், இரவு தூங்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், தூக்க கலக்கத்தில் இருந்த தொழிலதிபர் சங்கர் மீண்டும் நேற்று மாலை தனது வீட்டிற்கு செல்வதற்காக காரில் வந்துள்ளார். அப்போது, வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் குன்றத்தூர் அருகே எதிர்பாராதவிதமாக கார் அவரது கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் ஓரமாக இருந்த தடுப்புகளை உடைத்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இதை பார்த்து அந்த வழியாக சென்ற மற்ற வாகன ஓட்டிகள் உடனடியாக சங்கரை மீட்டு, சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கிரேன் உதவியுடன் கால்வாயில் கவிழ்ந்து கிடந்த காரை மீட்டனர். …

The post தொழிலதிபர் சென்ற கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து appeared first on Dinakaran.

Tags : Chennai ,Sankar ,Nallur Update ,Kunthatur ,Dinakaran ,
× RELATED யூடியூபர் சங்கரை குண்டர் சட்டத்தில்...