சினிமாவுக்கு ஓடிடி அவசியம்: ரெஜினா

சமீபத்தில்  வெளியான சக்ரா படத்தில் வில்லியாக நடித்துள்ளார் ரெஜினா. அவர் கூறியதாவது:  சமீபத்தில் சில படங்களில் வில்லியாக நடித்துள்ளேன். அதனால் யாரும் என்னை  வில்லி நடிகை என்று முத்திரை குத்திவிட முடியாது. சக்ராவில் டிஜிட்டல்  உலக வில்லியாக நடித்தேன். இப்போதுள்ள டிஜிட்டல் உலகில் நல்லதும்  இருக்கிறது, கெட்டதும் இருக்கிறது. எது ேதவை என்று நாம்தான் தீர்மானிக்க  வேண்டும். சமூக வலைத்தளங்கள், மீடியாக்கள் பெண்களுக்கு எதிராக இருப்பதாக  நான் கருதவில்லை. இவை வராத காலத்திலும் பாலியல் தவறுகள், குற்றங்கள்  இருக்கத்தான் செய்தது. 

நம் பாதுகாப்பு நம் கையில் இருக்கிறது. கொரோனா  காலத்தில் சினிமாவை காப்பாற்றியது ஓடிடி தளங்கள்தான். இனி வரும் காலத்தில்  ஓடிடி தளங்கள் சினிமாவுக்கு அவசியமானது. நிறைய திறமையாளர்களுக்கு ஓடிடி  பிளாட்பார்ம் உதவுகிறது. புதிய புதிய சிந்தனைகள் வருகிறது. ஓடிடி  தளத்திற்கு கட்டுப்பாடு வேண்டுமா, சென்சார் வேண்டுமா என்பதை அரசுதான்  முடிவு செய்ய வேண்டும். என்னை பொருத்தவரை ஓடிடி தளத்தில் வரும்  வெளிப்படையான படைப்புகளை வரவேற்கிறேன். விரும்பி பார்க்கிறேன்.

Related Stories: