×

மாண்டஸ் புயல் எதிரொலி: வேதாரண்யத்தில் உப்பு ஏற்றுமதி பணிகள் தீவிரம்..கனமழைக்கு முன்பே வெளியூர்களுக்கு அனுப்ப மும்முரம்..!!

நாகை: புயல் காரணமாக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால் வேதாரண்யத்தில் உப்பு ஏற்றுமதி பணிகள் தீவிரமடைந்திருக்கின்றன. நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அகஸ்தியன் பள்ளி, கோடியக்கரை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெற்று வருகிறது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து இருப்பதால் ஒரு மாதத்திற்கு முன்பே மழைநீர் தேங்கி உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது. ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்டிருந்த உப்பை, உற்பத்தியாளர்கள் தார்பாய் கொண்டும், பனை ஓலையை வைத்தும் மூடி வைத்திருந்தனர். இந்த நிலையில் தற்போது மாண்டஸ் புயல் கரையை நெருங்கி வருவதால் கடலோர மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 3 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்திருப்பதால் வேதாரண்யத்தில் உப்பு பாக்கெட்டுகளை நிரப்பும் பணியில் நூற்றுக்கணக்கான பெண்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். கனமழைக்கு முன்பாகவே சாக்கு மூட்டைகளில் உப்பை நிரப்பி வெளியூர்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. …

The post மாண்டஸ் புயல் எதிரொலி: வேதாரண்யத்தில் உப்பு ஏற்றுமதி பணிகள் தீவிரம்..கனமழைக்கு முன்பே வெளியூர்களுக்கு அனுப்ப மும்முரம்..!! appeared first on Dinakaran.

Tags : Mandus ,Vedharanya ,Nagai ,Vedaran ,Agastyan ,Vedaranyam, Nagai district ,Vedaranyam ,Dinakaran ,
× RELATED இன்று மீண்டும் தொடங்குவதாக இருந்த...