×

எல்.ஐ.சி.யுடன் 4 பொதுத்துறை நிறுவனங்கள் இணைக்க முடிவு: ஒன்றிய அரசு பரிந்துரைத்திருப்பதாக தகவல்

சென்னை: எல்.ஐ.சி.யுடன் 4 பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களை  இணைக்க ஒன்றிய அரசு முடிவு எடுத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி. இந்தாண்டு மே மாதத்தில் ஊழியர்கள் மற்றும் பாலிசிதாரர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டு தனியார் மையமாக்கப்பட்டது. பட்டியலிடப்பட்ட தொகையில் இதுவரை 20% மேல் எல்.ஐ.சி.யின் பங்குகள் சரிந்துள்ளன. இந்நிலையில், எல்.ஐ.சி.யுடன் 4 பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களை இணைக்க ஒன்றிய அரசு பரிந்துரைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும், எந்தந்த நிறுவனம் இணைக்கப்பட உள்ளன என்பது குறித்து விவரங்கள் வெளியாகவில்லை. ஓரியண்டல் இன்சூரன்ஸ், நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி, நியூ இந்தியா அசுரன்ஸ் கம்பெனி, யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி ஆகிய 4 நிறுவனங்களை ஒன்றாக இணைக்க வேண்டும் என ஊழியர்கள் சங்கங்கள் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.      …

The post எல்.ஐ.சி.யுடன் 4 பொதுத்துறை நிறுவனங்கள் இணைக்க முடிவு: ஒன்றிய அரசு பரிந்துரைத்திருப்பதாக தகவல் appeared first on Dinakaran.

Tags : l. GI RC ,UK ,Government of the Union ,India ,Union Government ,Dinakaran ,
× RELATED பிரான்சில் இருந்து கடல் வழியாக...