×

கன்னட நடிகர்கள் ஜக்கேஷ், தர்ஷன் மோதல்

கன்னட நடிகர் ஜக்கேஷ், சமீபத்தில் கன்னட திரையுலக தயாரிப்பாளர் ஒருவரிடம் பேசும்போது, ஆபாசமாக சில வார்த்தைகளை கூறியதாக தெரிகிறது. இதை ஆடியோவாக பதிவு செய்து கொண்ட அந்த தயாரிப்பாளர் உடனே அதை நடிகர் தர்ஷனுக்கு அனுப்பி வைத்துள்ளார். இதை கேள்விப்பட்ட தர்ஷன் ஆதரவாளர்கள் ஜக்கேஷ் இருந்த மைசூர் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று, அவரை மிரட்டி மன்னிப்பு கேட்கும்படி செய்தனர். 

இது குறித்து ஜக்கேஷ் கூறுகையில், ‘ராஜ்குமார், விஷ்ணுவரதன், அம்பரீஷ், சங்கர்நாக் ஆகியோருடன் நடித்துள்ளேன். நான் நடிக்கும்போது, இப்பொழுது என்னை மிரட்டும் நடிகர்கள் கன்னட திரையுலகிலேயே இல்லை. திடீரென்று முளைத்துள்ள அவர்கள், தற்போது குண்டர்களை கொண்டு, என்னை மிரட்டுகின்றனர்’ என்றார்.

Tags : Jakesh ,Darshan ,
× RELATED ஒசூர் அடுத்த பாகலூர் அருகே நாகண்ணா ஏரியில் மூழ்கி 2 மாணவர்கள் உயிரிழப்பு