மலையாள ரீமேக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ்

மலையாளத்தில்  ஜியோ பேபி இயக்கத்தில் நிமிஷா சஜயன், சுராஜ் வெஞ்சாரமூடு நடித்த படம், தி  கிரேட் இந்தியன் கிச்சன். திருமணமான இளம் பெண், ஆணாதிக்கம் நிறைந்த  கணவனிடமும், அவனது குடும்பத்தினரிடமும் சந்திக்கும் பிரச்னைகளும், பிறகு  அந்தப் பெண் எடுக்கும் முடிவுகளும்தான் கதை. கடந்த ஜனவரி 15ம் தேதி  ஓடிடியில் வெளியான இப்படம் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக்  ஆகிறது. அதற்கான உரிமையை இயக்குனர் ஆர்.கண்ணன் வாங்கியுள்ளார். அவரது  இயக்கத்தில், நிமிஷா சஜயன் நடித்திருந்த கேரக்டரில் ஐஸ்வர்யா ராஜேஷ்  நடிக்கிறார். தமிழிலும், தெலுங்கிலும் அவரே நடிக்கிறார்.

Related Stories:

>