×

சிரஞ்சீவி தங்கையாகும் பிரியாமணி...!

மலையாளத்தில் நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்த படம் லூசிபர். இப்படம் தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் ரீமேக் ஆகிறது. ஜெயம் ராஜா இந்த படத்தை இயக்குகிறார். மலையாளத்தில் மோகன்லாலின் தங்கை வேடத்தில் நடித்தவர் மஞ்சு வாரியர்.

அந்த வேடத்தில் தெலுங்கில் பிரியாமணி நடிக்க உள்ளாராம். தமிழில் அசுரன் படத்தில் மஞ்சு வாரியர் நடித்திருந்தார். அதன் தெலுங்கு ரீமேக்கிலும் மஞ்சு வாரியர் கேரக்டரில் பிரியாமணியே நடிப்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Priyamani ,Chiranjeevi ,
× RELATED திருத்தணி அருகே வாகன சோதனையின்போது ரூ.25.90 லட்சம் பறிமுதல்..!!