அடுத்த சிம்ரன் பிரியா பவானி சங்கர்தான்....!

தமிழில் தற்போது பிசியாக இருக்கும் நடிகை யார் என்றால் உடனே சொல்லிவிடலாம், பிரியா பவானி சங்கர்தான் என்று. டஜன் படங்களில் நடித்து வருகிறார். இத்தனைக்கும் இவர் நடித்த மேயாத மான், கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், களத்தில் சந்திப்போம் ஆகிய 4 படங்கள்தான் வெளிவந்தன. இந்த 4 படங்களாலும் இவருக்கு பெரிய அளவில் பெயர் எதுவும் கிடைக்கவில்லை.

கடைக்குட்டி சிங்கம் பெரிய வெற்றி பெற்றாலும் இவரது கேரக்டர் பேசப்படவில்லை. ஆனாலும் தமிழ் சினிமாவுக்கு ஏற்ற ஹோம்லி லுக்குடன் இருப்பதாக இவருக்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவு இருக்கிறது. இதனாலேயே தொடர்ந்து படங்களில் கமிட் ஆகி வருகிறார். அத்துடன் பிரச்னை செய்யாத நடிகை, வீண் செலவு வைக்காதவர் என்ற பெயரும் பெற்றிருக்கிறார்.

மேலும் தயாரிப்பாளரின் சூழலை புரிந்துகொண்டு சம்பளம் நிர்ணயிப்பதில் கறாராக இல்லை என்பதுதான் இவருக்கு கிடைத்திருக்கும் மற்றொரு நல்ல பெயர். இதனால் கொடுக்கும் சம்பளத்தை வாங்கிக் கொள்ளும் நடிகை என்ற பெயரும் பெற்றிருக்கிறார். அதே சமயம், நல்ல தரமான படங்களை மட்டுமே ஏற்கிறார். உப்புமா பட வாய்ப்புகள் வந்தால் அதை ஏற்பதில்லை. தமிழ் சினிமாவின் அடுத்த சிம்ரன் இவர்தான் என பிரியாவை புகழ்கிறார் எஸ்.ேஜ.சூர்யா.

Related Stories: