திரில்லர் கதையில் ஐஸ்வர்யா ராஜேஷ்...!

தமிழில் பல படங்களில் நடித்துள்ள விஷ்ணு விஷால், பிறகு தயாரிப்பாளராக மாறினார். தற்போது பிரபு சாலமன் இயக்கத்தில் அவர் நடித்துள்ள தமிழ் காடன், தெலுங்கு ஆரண்யா எழில் இயக்கத்தில் நடித்த ஜெகஜால கில்லாடி ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இந்நிலையில், எப்.ஐ.ஆர் படத்தை தயாரித்து நடிக்கும் விஷ்ணு விஷால், அடுத்து மோகன்தாஸ் என்ற படத்தை தயாரித்து நடிக்கிறார். இதை களவு படத்தின் இயக்குனர் முரளி கார்த்திக் இயக்குகிறார். உண்மை சம்பவம் ஒன்றை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ் ஹீரோயினாக நடிக்கிறார்.

தனது கைவசம் திட்டம் இரண்டு, இது வேதாளம் சொல்லும் கதை, துருவ நட்சத்திரம், இடம் பொருள் ஏவல், பூமிகா, டிரைவர் ஜமுனா, தெலுங்கில் தக் ஜகதீஷ், ரிபப்ளிக், அய்யப்பனும் கோஷியும் மலையாள ரீமேக் ஆகிய படங்களை வைத்திருக்கும் அவர், பத்தாவது படமாக மோகன்தாஸ் என்ற படத்தில் நடிக்கிறார். இது திரில்லர் கதையுடன் உருவாகிறது. இதற்கிடையே கொடைக்கானல் பகுதியில் நடந்த படப்பிடிப்புக்கு சென்ற அவர், வில் வித்தை பயிற்சியை மேற்கொண்டார். தற்போது அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

Related Stories:

>