கிளாமருக்கு தயாரான தமன்னா....!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று தேறிய தமன்னா, தற்போது மீண்டும் தன் உடல் வனப்பைக் கூட்ட முடிவு செய்து, ஷூட்டிங் இல்லாத எல்லா நேரமும் ஜிம்மே கதியென்று கிடக்கிறார். ஏற்கனவே தீவிர உணவுக்கட்டுப்பாடு கடைப்பிடித்து ஸ்லிம்மாக இருந்த அவர், கொரோனாவில் இருந்து தப்பிப்பதற்காக அதிக எனர்ஜி நிறைந்த உணவு வகைகளை சாப்பிட்டு உடல் எடை கூடிவிட்டாராம்.

முகம் பொலவிழந்து போனதால், அவரது தோற்றம் சற்று குண்டாக மாறிவிட்டது. இதைப் பார்த்து பயந்த அவர், தீவிர கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து உடற்பயிற்சி செய்து, மீண்டும் கிளாமராக நடிப்பதற்கு தயாராகி விட்டார். ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வரும் அவர், ‘இப்போது நான் பழைய தோற்றத்துக்கு மாறிவிட்டேன்.

கொரோனா நோய் மிகவும் கொடுமையானது என்றாலும், அது கற்றுக்கொடுக்கும் பாடங்கள் நிறைய இருக்கிறது. அடிக்கடி உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு சோர்வாக இருந்தாலும், மருத்துவர்களின் அறிவுரையை மிகச்சரியாக கடைப்பிடித்து சிகிச்சை பெற்றதால், கொரோனாவின் கொடூர தாக்குதலில் இருந்து தப்பித்து விட்டேன். ஏற்கனவே ஓட்டல் உணவுகளையும், எண்ணெய்யில் பொரித்த பண்டங்களையும் நான் சாப்பிடுவது இல்லை. வீட்டில் சமைக்கும் உணவு வகைகளை மட்டும் சாப்பிடுகிறேன்’ என்றார்.

Related Stories:

>