×

ஆஸ்கரிலிருந்து ஜல்லிக்கட்டு வெளியேற்றம்...!

உலகத்தின் மிகப்பெரிய திரைப்பட விழாவான ஆஸ்கர் விருது வழங்கும் விழாவுக்கு ஆண்டுதோறும் இந்தியாவில் இருந்து படங்கள் அனுப்பப்படும். இந்த முறை மலையாளத்தில் வெளிவந்த ஜல்லிக்கட்டு என்ற படம் தேர்வு செய்யப்பட்டு ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்டது. லிஜோ ஜோஸ்  பெல்லிச்சேரி இயக்கத்தில், ஆண்டனி வர்கீஸ், செம்பன் வினோத் ஜோஸ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். தப்பி ஓடிய ஒரு அடிமாட்டை ஊர்மக்கள் சேர்ந்து பிடிப்பதுதான் படத்தின் கதை.

ஆஸ்கர் பரிந்துரைக்கான இறுதி பட்டியலை ஆஸ்கர் அகாடமி வெளியிட்டுள்ளது. இதில் ஜல்லிக்கட்டு படம் இடம்பெறவில்லை. குறும்படப் பிரிவில் இந்தியாவின் பரிந்துரையான பிட்டூ இறுதிப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. கரிஷ்மா தேவ் துபே என்பவர் இயக்கியுள்ள இந்தப் படம் இரண்டு பள்ளி தோழிகள் பற்றியது. ஏப்ரல் 25ம் தேதி ஆஸ்கர் விருது  வழங்கும் விழா நடைபெறவுள்ளது.

Tags : expulsion ,Oscars ,
× RELATED 96வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா மேடையில் ஜான்சீனா…!