×

வரும் ஆண்டில் 1 லட்சம் டிரோன் பைலைட்கள் தயார் உலகின் டிரோன் மையமாக இந்தியா உருவாகும்: ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் நம்பிக்கை

சென்னை: 2023ம் ஆண்டிற்குள் 1 லட்சம் டிரோன் பைலைட்டுகள் தயார்நிலையில் இருப்பார்கள். இதன் மூலம், இந்தியா உலகின் டிரோன் மையமாக மாறும் என ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த தாழம்பூரில் உள்ள தனியார் தொழில் நுட்பக் கல்லூரியில், ‘கருடா ஏரோஸ்பேஸ்’ நிறுவனத்தின் சார்பில் இந்தியாவின் முதல் டிரோன் திறன், பயிற்சி மையத்தின் திறப்பு விழா மற்றும் டிரோன் யாத்திரை தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில், ஒன்றிய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கலந்துக் கொண்டு, பயிற்சி பெற்ற 75 மாணவர்களுக்கு சான்றிதழ்களையும், 10 பேருக்கு டிரோன்களையும் வழங்கினார். விழாவில் ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் பேசியதாவது: கொரோனா காலத்திலும், தடுப்பூசிகளை நாடு முழுவதும் கொண்டு சென்று விநியோகித்ததில் டிரோன் பெரும் பங்குவகித்தது. டிரோன் தொழில்நுட்பத்தை ஊக்குவிக்கும் வகையில் 2021ம் ஆண்டு ஒன்றிய அரசு ஆக்கப்பூர்வமாக கொள்கை வகுத்தது. அதன்படி, நவீன டிரோன் தொழில்நுட்பம் மூலம் 3 அம்ச அணுகுமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும், டிரோன் பைலைட்டுகள் வேலைவாய்ப்பின் மூலம் நல்ல ஊதியம் ஈட்டும் வாய்ப்பு இருக்கிறது. இதனால் விவசாயத்துறையில் ஆண்டுக்கு ரூ.24 ஆயிரம் கோடி அளவுக்கு 4 மடங்கு சேமிக்க முடியும். அதேபோல், சட்டவிரோத சுரங்கத் தொழிலை தடுப்பதற்கும் டிரோன் தொழில்நுட்பம் பயன்படும். தற்போது நாட்டில் 200க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப்-கள் ட்ரோன் தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.இந்த எண்ணிக்கை நிச்சயம் அதிகரித்து லட்சக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகளை இளைஞர்களுக்காக உருவாக்கும். மேலும், இளைஞர்களுக்கு இந்தத் துறையில் திறன் பயிற்சி அளிப்பதில் முதலீடு செய்ய ஒன்றிய அரசு தொடர்ந்து முனைப்புக் காட்டி வருவதால் உலகிலேயே டிரோன் தொழில்நுட்ப மையமாக மாறுவதற்கான பாதையில் இந்தியா பயணிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்….

The post வரும் ஆண்டில் 1 லட்சம் டிரோன் பைலைட்கள் தயார் உலகின் டிரோன் மையமாக இந்தியா உருவாகும்: ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் நம்பிக்கை appeared first on Dinakaran.

Tags : India ,Union Minister ,Anurag Thakur ,Chennai ,Dinakaran ,
× RELATED மராட்டியத்தில் நடந்த பிரச்சாரக்...