×

தொடரும் விஜய் சேதுபதியின் வில்லத்தனம்..!

வைஷ்ணவ் தேஜ் ஹீரோவாகவும் கிரித்தி ஷெட்டி ஹீரோயினாகவும் நடிக்கும் தெலுங்கு படம் உப்பேனா. இந்த படத்தில் கிரித்தி ஷெட்டியின் அப்பாவாக நடிப்பவர் விஜய் சேதுபதி. இந்த படத்தை அறிமுக டைரக்டர் புச்சிபாபு சனா இயக்குகிறார். கதைப்படி, ஜாதி மாறி காதலிக்கும் மகளை வெறுக்கிறார் விஜய் சேதுபதி. அவரை கவுரவ கொலை செய்யவும் துணியும் கொடூர வில்லன் கேரக்டரில் அவர் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது. ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும்போது, வில்லனாக நடிக்க பலரும் தயங்குவார்கள்.

ஆனால் வில்லன் வேடத்தில் நடிக்க தொடர்ந்து முன்வருகிறார் விஜய் சேதுபதி. தமிழில் பேட்ட, மாஸ்டர் படங்களில் வில்லத்தனம் காட்டிய அவர், இப்போது உப்பேனா படத்திலும் அதுபோல் நடித்திருக்கிறார். அடுத்து, இந்தி, தமிழ், தெலுங்கில் உருவாகும் வெப்சீரிஸில் அவர் நடிக்க உள்ளார். அதிலும் வில்லன் வேடம்தானாம். இதில் பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூர் நடிக்கிறார். அவருக்கு எதிராக வில்லத்தனம் செய்யும் கேரக்டரில் விஜய் சேதுபதி வருகிறாராம்.

Tags : Vijay Sethupathi ,
× RELATED விஜய் சேதுபதி படத்தில் மம்தா மோகன் தாஸ்