×

ஜூலை மாதம் ஷூட்டிங் ஆரம்பம்...! ஏப்ரல் 2022ல் சூர்யா - வெற்றிமாறனின் வாடிவாசல்

சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்று இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். இயக்குனர் வெற்றிமாறன் இப்போது, சூரி ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்ற கதையை மையமாக வைத்து இந்தப் படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தை அடுத்து சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தை இயக்குகிறார் வெற்றிமாறன். சி.சு.செல்லப்பாவின் வாடிவாசல் நாவலை மையமாகக் கொண்டு உருவாகும் படம் இது.

கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்குகிறது என்பது பற்றி, தெரியவந்துள்ளது. இந்தப் படத்தின் ஷூட்டிங் ஜூலை மாதம் தொடங்க இருக்கிறது. அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். இதில் நடிகர் சூர்யா, இரண்டு வேடங்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. நடிகர் சூர்யா இப்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Tags : Shooting ,Vetrimaran Vadivasal ,
× RELATED மசூதி மீது அம்பு விடுவது போன்ற சைகை...