×

கமலியாக மாறிய ஆனந்தி...!

கல்விக்காக ஒரு பெண் மேற்கொள்ளும் பயணத்தை சொல்லும் படமாக உருவாகியுள்ளது, கமலி பிரம் நடுக்காவேரி. கயல் ஆனந்தி நடித்துள்ளார். ராஜசேகர் துரைசாமி இயக்கியுள்ளார். அவர் கூறுகையில், ‘என் வாழ்க்கையில் சந்தித்த சில சம்பவங்களின் அடிப்படையில் திரைக்கதை எழுதியுள்ளேன். ஒருவிதத்தில் நான், ஆண் கமலி என்று சொல்லலாம். கிராமத்தில் இருந்து வரும் ஒரு பெண், சமூகத்தில் பெண்கள் மீது வைக்கப்படும் வரம்புகளை மீறி கல்வி பெறுவதும், தன் முழு ஆற்றலை அறிந்துகொள்வதும்தான்  கதை. இப்போது கூட கிராமப்புறங்களில் வசிக்கும் பெண்கள்  கல்வியில் அதிக அக்கறை காட்டுவதில்லை.

பல இடங்களில் பெண்கள் இன்னும் அடக்கி வைக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களின் முழுமையான ஆற்றல் அவர்களுக்கே தெரிவது இல்லை. அதை வெளிக்கொண்டு வரும் கதை கொண்ட இப்படத்தில் நடிக்க பொருத்தமானவரை தேடியபோது, கயல் ஆனந்தி மிகச் சரியானவராக தோன்றினார். இதுவரை அவரது திறமை எந்தப் படத்திலும் முழுமையாக வெளியாகவில்லை. இப்படம் அவரை வேறொரு தளத்துக்கு கொண்டு செல்லும். லோகய்யன் ஒளிப்பதிவு செய்ய, தீனதயாளன் இசை அமைக்கிறார்’ என்றார்.

Tags : Anandi ,Kamali ,
× RELATED 6 கண்களும் ஒரே பார்வை: விமர்சனம்