×

ஒரு வருடத்தை நிறைவு செய்த ''மாஸ்டர் செல்பி''...: ட்விட்டரில் கொண்டாடும் ரசிகர்கள்

தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி உலகம் முழுவதும் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்ற நிலையில் இன்றுடன் ‘மாஸ்டர்’ செல்பி வெளியாகி ஒரு வருடம் ஆகியதை அடுத்து விஜய் ரசிகர்கள் இதுகுறித்த ஹேஷ்டேக்கை பதிவு செய்து கொண்டாடி வருகின்றனர். மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் நடந்த போது படப்பிடிப்பில் கலந்துகொண்ட விஜய்யை காண்பதற்காக அவருடைய ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் குவிந்தனர்.

அப்போது ரசிகர்கள் மத்தியில் கையசைத்த விஜய் ஒரு கட்டத்தில் வேன் மீது ஏறி செல்பி ஒன்றை எடுத்தார். ரசிகர்களுடன் இணைந்து எடுக்கப்பட்ட இந்த செல்பி புகைப்படத்தை விஜய் தனது டுவிட்டரில் பதிவு செய்திருந்தார் என்பதும் அந்த ட்வீட் மிக அதிகமாக ரீடுவிட் செய்யப்பட்டது என்று கடந்த ஆண்டு சாதனை செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கவை.
 
இந்த நிலையில் ‘மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பின்போது செல்பி எடுத்தது இன்றுடன் ஒரு வருடம் முடிந்து விட்டது. இதனை அடுத்து #1YearOfMasterSelfie என்ற ஹேஷ்டேக்கை அவருடைய ரசிகர்கள் டுவிட்டரில் வைரலாக்கி வருகின்றனர். மேலும் இன்று மீண்டும் அவருடைய செல்பி ட்வீட் அனைத்து ரசிகர்களாலும் பகிரப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Master Selby ,Fans ,
× RELATED தென்கொரியாவைக் கலக்கும் 80வயது...