×

மான்ஸ்டர் ஹன்டர் - விமர்சனம்

ஒரு புது உலகம் அங்கே விதவிதமான மான்ஸ்டர்களுடன் வாழும் மனிதர்கள். அந்த விலங்குகளுடன் போராடி வாழவே மனிதர்களும் வெட்டையாளர்களாக மாறியிருக்கின்றனர். ஒரு சண்டையில் தப்பிச் செல்கையில் ஒருவர் மட்டும் தொலைந்து பாலைவனத்தில் மாட்டிக் கொண்டு அங்கேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார். இங்கே அமெரிக்க ஐக்கிய நாடு நாம் வாழும் சாதாரண உலகம் இங்கே ஒரு ராணுவ அதிகாரிகள் குழு கேப்டன் நதாலியா ஆர்டிமிஸ் தலைமையில் தொலைந்து போன சக அதிகாரிகளை தேடி வருகிறார்கள். இடையில் ஒரு மணல் புயல் தாக்க புது உலகிற்குள் தொலைந்து போகிறார்கள்.

அங்கே அவர்களுக்கு ராட்சத மான்ஸ்டர்கள் காத்திருக்கின்றன. ஆபத்துகள் எதுவும் தெரியாமல் உள்ளே வரும் ராணுவ வீரர்களுக்கு அலாரம் கொடுக்கும் விதமாக சிவப்பு பொடியை அம்பில் வைத்து வீசுகிறார் ஹண்டர். எனினும் ஆபத்தை புரியாமல் மான்ஸ்டரிடம் மாட்டிக் கொண்டு உயிரை விடுகின்றனர். இதில் தப்பிக்கும் நதாலியாவிற்கும் ஹாண்டருக்கும் இடையே சண்டை நடக்கிறது. எனினும் ஒரு கட்டத்தில் சுற்றியிருக்கும் ஆபத்துகளை புரிந்துகொள்ளும் இருவரும் எப்படியேனும் மான்ஸ்டரை அழித்து நதாலியா தன் உலகத்துக்கும் ஹன்டர் தன் கூட்டத்தாருடன் இணைந்தார்களா இல்லையா என்பது மீதிக்கதை.

வழக்கமான ராட்சத மிருகங்கள் அதனுடன் சண்டையிடும் மனிதர்கள். இப்படி வழக்கமான கதையாக இருந்து விடக்கூடாது என்பதற்காக இயக்குனர் பால் ஆண்டர்சன் புதியஉலகம் அதில் நடக்கும் சண்டை என கதையை அமைத்திருக்கிறார். எனினும் இவர்கள் இருவரும் எதற்காக அவ்வளவு நேரம் சண்டை போடுகிறார்கள் என்பதற்கு சரியான காரணமும் இல்லை. டோனி ஜா, மில்லா ஜோவோவிச் இருவரும் ஆக்ஷன் காட்சிகளில் கண்களுக்கு விருந்து காட்டுகிறார்கள். இருவர் மட்டுமே படம் முழுக்க அதிகம் வரப் போகிறார்கள் என்பதை உணர்ந்து கொண்டு படம் முழுக்க ஆக்ஷன் காட்சிகளில் அதிரடி காட்டுகிறார்கள்.

கிராபிக்ஸ் காட்சிகளுக்கு ஏற்ப ஒளிப்பதிவும் பின்னணி இசையும் அற்புதமாகவே அமைக்கப்பட்டுள்ளன. எனினும் தற்சமயம் வெப்சீரிஸ்களே வேற லெவல் கதைகள் யோசிக்கும் காலம் வந்துவிட்டதால் இந்த 'மான்ஸ்டர் ஹன்டர்' சில இடங்களில் காட்சிகள் நீளமாகவும், இன்னும் ஏதோ ஒன்று குறைகிறது என்னும் எதிர்பார்ப்பும் ஏற்படுகிறது. நீண்ட இடைவேளைக்கு பிறகு 'ஜுராசிக் பார்க்', 'கிங் காங்' உள்ளிட்ட படங்கள் பாணியில் வந்திருக்கும் இந்த படம் கொரோனா கால நீண்ட இடைவேளைக்கு சின்ன ஆறுதல் தருவது போல் வந்திருக்கும் ஹாலிவுட் படமாக 'மான்ஸ்டர் ஹன்டர்' தவிர்க்க முடியாத படமாக மாறியிருக்கிறது.

Tags :
× RELATED சமந்தா வெளியிட்ட நிர்வாண போட்டோ: ரசிகர்கள் கடும் அதிர்ச்சி