தளபதி 65-யிலும் குக் வித் கோமாளி புகழ்?

தளபதி விஜய்யின் 'மாஸ்டர்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி 200 கோடிக்கும் மேல் வசூலித்து பாக்ஸ் ஆஃபிஸில் வெற்றி பெற்றுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் படத்தில் அனிருத்தின் இசையும், விஜய்யின் நடிப்பும், விஜய் சேதுபதியின் வில்லத்தனமும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. இதற்கிடையில், விஜய் தற்போது தனது அடுத்த படமான 'தளபதி 65' முதற்கட்ட பணிகளில் பிஸியாக உள்ளார். இதன் படப்பிடிப்பு சில வாரங்களில் தொடங்கவிருக்கிறது.

பூஜா ஹெக்டே மற்றும் ராஷ்மிகா மந்தன்னா ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், யோகி பாபு ஏற்கனவே ஒப்பந்தமாகி விட்டதாகவும் கூறப்படுகிறது. குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் கிடைத்த பிரபலத்தால் தல அஜித்தின் வலிமை படத்திலும், அருண் விஜய் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் புகழ் நடித்து வருவதாக கூறப்பட்ட நிலையில் தற்போது, தளபதியின் 65 பட வாய்ப்பையும் இவர் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories:

>