ஏப்ரல் மாதத்தில் தொடங்குகிறது தளபதி 65 படப்பிடிப்பு..? இந்த ஆண்டே ரிலீசாக வாய்ப்பு.!

கோகிலா படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன். இவர் தற்போது இயக்கியுள்ள டாக்டர் படம் வருகிற மார்ச் 26-ந் தேதி ரிலீசாக உள்ளது. இதையடுத்து விஜய் நடிக்கும் தளபதி 65 படத்தை இயக்க உள்ளார் நெல்சன். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் குறித்த அறிவிப்பு கடந்த டிசம்பர் மாதமே வெளியிடப்பட்டது. இந்நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் எப்போது துவங்கும் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி வருகிற ஏப்ரல் மாதம் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர். தற்போது டாக்டர் படத்தின் வெளியீட்டு பணிகளில் பிசியாக இருக்கும் நெல்சன், அந்தப் படம் ரிலீசான பின்னரே தளபதி 65 படத்தின் படப்பிடிப்பை தொடங்க உள்ளாராம். மேலும் இப்படத்தின் படப்பிடிப்பை இரண்டே மாதத்தில் முடிக்க திட்டமிட்டுள்ளார்களாம். அதன்படி ஜூன் அல்லது ஜுலை மாதத்தில் படப்பிடிப்பு முடிக்கப்பட்டால், இந்த ஆண்டே தளபதி 65 படம் ரிலீசாக வாய்ப்புள்ளது.

Related Stories:

>