×

பிப்ரவரி 12 ல் வெளியாகிறது சந்தானத்தின் 'பாரிஸ் ஜெயராஜ்'

சமீபத்தில் அரசு, 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளித்துள்ளதால் தொடர்ந்து, அனைத்து பணிகளும் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ள படைகளின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது 'பாரிஸ் ஜெயராஜ்  வரும் 12 ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் ஜான்சன் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள படம் 'பாரிஸ் ஜெயராஜ்'. அனைகா சோதி, மொட்டை ராஜேந்திரன் உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த வருடம் டிசம்பர் 1-ந்தேதி வெளியானது. இதை தொடர்ந்து, வெளியான இந்த படத்தின் ட்ரைலருக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

Tags : Santhanam ,Paris Jayaraj ,
× RELATED இன்றைய நிகழ்ச்சி சம்மர் ஸ்போர்ட்ஸ்...