×

சென்னை வந்தா வீட்டுக்கு வாங்க...! யார்க்கர் கிங் நடராஜனுடன் சரத்குமார் வீடியோ உரையாடல்

ஆஸ்திரேலியாவுக்கு நெட்பவுலராகச் சென்று ஒருநாள், டி20, டெஸ்ட் என்று  மூன்று சர்வதேச இந்திய அணிகளிலும் ஆடி, வெற்றிகரமாகப் பந்து வீசியவர் நடராஜன். இவருக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்துவரும் சூழலில், தேர்தல் சுற்றுப் பயணத்தில் இருக்கும் சரத்குமாரும் ராதிகாவும் வீடியோ காலில் பேசி பாராட்டு தெரிவித்தது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் நேற்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும், நடிகருமான சரத்குமாரும், ராதிகாவும் வீடியோகாலில் உரையாடினர்.

அதில், நடராஜன் கிட்ட திறமை இருந்தது வந்தாரு. திறமை இருக்கறவங்கள்லாம் வரலாம் அப்டீன்னு உங்க பேரை குறிப்பிடுவேன். நாங்க ரெண்டுபேரும் உங்களை வந்து பார்க்கலாம்னு இருந்தோம். இங்கிலாந்தோட ஃபர்ஸ்ட் 2 டெஸ்ட்டுக்கு நீங்க இல்லை இல்லையா? ஓகே நல்ல ஃபியூச்சர் இருக்கு. விஷ் யு ஆல் த பெஸ்ட் நடராஜ். நான் வரேன், வீட்டுக்கு ஒருநாள் வரோம். சென்னைக்கு வந்தா எங்க வீட்டுக்கு வாங்க’ என்று சரத்குமார், மனைவி ராதிகாவுடன் இணைந்து பேசினார்.

Tags : Chennai ,house ,Sarathkumar ,Yorker King Natarajan ,
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்