×

அரசின் குடிமராமத்து திட்டம்: கமிஷன் சம்மந்தப்பட்டது: சேலத்தில் கமல்ஹாசன் பேட்டி

சேலம்: அரசின் குடிமராமத்து திட்டம் கமிஷன் சம்மந்தப்பட்டது என சேலத்தில் கமல் தெரிவித்தார். மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், நேற்று 2வது நாளாக சேலத்தில் பிரசாரம் மேற்கொண்டார். முன்னதாக அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் சுற்றுச்சூழலை சீரமைப்பதற்கான 7 அம்ச செயல் திட்டங்களை வைத்துள்ளோம். ஏற்கனவே பல்வேறு சட்டங்கள், கட்டுப்பாடுகள், விதிகள் போன்றவை அமலில் இருந்தாலும், அவை முறையாக பின்பற்றப்படாதது தான், தமிழகம் முழுவதும் மாசுபாட்டுக்கு காரணமாக உள்ளது. சேலம் உள்பட எந்த பகுதியிலும், பாதாள சாக்கடை திட்ட பணிகள் நிறைவேற்றப்படவில்லை..எங்களின் திட்டம் மிஷன் சம்மந்தப்பட்டது. அரசின் குடிமராமத்து திட்டம் கமிஷன் சம்மந்தப்பட்டது. அது ஒரு இன்னொரு வியாபார யுக்தி. பல் பிடுங்கப்பட்ட லோக்பாலுக்கு, விரைவில் பல் கட்டப்படும். மக்கள் லஞ்சம் கொடுப்பதாக அமைச்சர்கள் பழிபோடுவது, நேர்மையற்ற கோழையின் செயலாகும். தலைமை சரியாக இருந்தால் படிப்படியாக, அந்த நேர்மை முறையாக மக்களை சென்றடையும். தொழில் வளர்ச்சி தேவையுள்ள அதே சமயத்தில் இருக்கிற வளங்களையும் பாதுகாக்க வேண்டும். சேலம் 8 வழிச்சாலை திட்டத்தால், வளங்கள் பறிபோகும் என்பதால், அத்திட்டம் தேவையில்லை என தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். தொழிற்சாலைகள் வேண்டும், ஆனால் மக்களின் உயிர் பலிக்கு நடுவே செய்யக்கூடாது. முறையாக சட்டதிட்டங்களை பின்பற்றியிருந்தால், தூத்துக்குடியில் 13 பேர் இறந்திருக்க அவசியம் இல்லை. பொங்கல் பரிசுடன் ₹2,500 கொடுப்பது, அரசுக்கு செலவு, மக்களுக்கு லாபம். இதனால் வேறு எந்த மாற்றமும் நிகழாது. இவ்வாறு அவர் கூறினார்..’தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை’சேலத்தில் நேற்று, 4 ரோட்டில் பொதுமக்கள் மத்தியில் பேசிய கமல்ஹாசன், பின்னர் அம்மாபேட்டை கொங்கு மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் கலந்துரையாடினார். தொடர்ந்து, கிச்சிப்பாளையம் மெயின்ரோட்டிலும், கொண்டலாம்பட்டியிலும் மக்கள் மத்தியில் கமல் பேசினார். அப்போது, “தமிழகம் மாற்றத்திற்கு தயாராகி கொண்டுள்ளது. நல்லவர்களுக்கு வழிவிட்டால், நாடு சீரடையும். இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை தான், தமிழகம் முழுவதும் காணப்படுகிறது. அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியது நமது கடமை. சரித்திரம் கொடுத்துள்ள வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்,” என்றார்….

The post அரசின் குடிமராமத்து திட்டம்: கமிஷன் சம்மந்தப்பட்டது: சேலத்தில் கமல்ஹாசன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Kamalhasan ,Saleam ,Salem ,Kamal ,Kudimaramathu ,People's Justice Maiyam Party ,Saleh ,Dinakaran ,
× RELATED குப்பைக்கழிவால் துர்நாற்றம்