பிரியா பவானிக்கு மணமகன் தேவை?

தமிழில் வெளியான மேயாத மான், மான்ஸ்டர், கடைக்குட்டி சிங்கம், மாஃபியா ஆகிய படங்களில் நடித்தவர், பிரியா பவானி சங்கர். தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் 14 படங்களில் நடித்து வருகிறார். அவரும், ஆஸ்திரேலியாவை சேர்ந்த ராஜு என்ற சாப்ட்வேர் என்ஜினீயரும் காதலித்து வருகின்றனர். இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு திடீரென்று தனது சமூக வலைத்தளத்தில், ‘மணமகன் வரவேற்கப்படுகிறார்’ என்று பதிவு செய்தார். இதையறிந்த ரசிகர்கள், காதல் தோல்வியால் பிரியா பவானி மணமகன் தேடுவதாக குழப்பம் அடைந்தனர். இதுகுறித்து விசாரித்தபோது, ஜாலிக்காகவே இதுபோல் அவர் பதிவு செய்தார் என்று தெரிய வந்தது. இதுபோல் அடிக்கடி அவர் ரசிகர்களை குழப்பி வருகிறார்.

Related Stories: