×

நடிகை ரகுல் பிரீத் சிங்கிற்கு கொரோனா தொற்று

நடிகை ரகுல் பிரீத் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என்னமோ ஏதோ, தீரன் அதிகாரம் ஒன்று, என்ஜிகே, தேவ் ஆகிய படங்களில் நடித்தவர் ரகுல் பிரீத் சிங். இந்தி, தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார். சிவகார்த்திகேயனுடன் நடிக்கும் அயலான் படத்தின் படப்பிடிப்பில் அவர் பங்கேற்றார். பின்னர் இந்தி படத்தின் படப்பிடிப்புக்காக மும்பை சென்றிருந்தார். அங்கு காய்ச்சலால் அவதிப்பட்ட ரகுல், கொரோனா பரிசோதனை செய்துகொண்டார். இதில் அவருக்கு கொரோனோ தொற்று உறுதியானது.

இது குறித்து ரகுல் பிரீத் சிங், இன்ஸ்டாகிராமில் கூறும்போது, ‘கொரோனா பாசிட்டிவ் வந்ததும் என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டேன். வீட்டிலேயே இதற்கான சிகிச்சை எடுத்து வருகிறேன். நலமாக இருக்கிறேன். சீக்கிரமே குணமாகி, படப்பிடிப்புக்கு திரும்புவேன். சமீபத்தில் என்னை சந்தித்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்’ என்றார்.

Tags : Corona ,actress ,Rahul Preet Singh ,
× RELATED நீதிமன்றத்தில் கூட பாதுகாப்பில்லை...