விக்ரம் வேதா ரீமேக்கிலிருந்து ஆமிர்கான் விலகல்

விக்ரம் வேதா படத்தின் இந்தி ரீமேக்கிலிருந்து பாலிவுட் நடிகர் ஆமிர்கான் விலகியுள்ளார். தமிழில் விஜய் சேதுபதி, மாதவன் நடித்த படம் விக்ரம் வேதா. புஷ்கர் - காயத்ரி இந்த படத்தை இயக்கி இருந்தனர். இந்த படம் பாலிவுட்டில் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை நடந்தது. இயக்குனரும் தயாரிப்பாளருமான நீரஜ் பாண்டே ரீமேக் உரிமையை வாங்கி இருந்தார். புஷ்கர் - காயத்ரி இந்தியிலும் இயக்குவதற்கு ஒப்பந்தமானார்கள். விஜய் சேதுபதி வேடத்தில் ஷாருக்கான் நடிக்க இருந்தார். ஆனால், திடீரென அவர் விலகினார்.

இதையடுத்து ஆமிர்கான் அந்த வேடத்தில் நடிக்க தேர்வானார். மாதவன் கேரக்டரில் நடிக்க சைப் அலிகான் ஒப்பந்தமானார். ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே இதன் படப்பிடிப்பு தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் சில காரணங்களால் படம் தள்ளிப்போனது. இந்நிலையில் லால் சிங் சட்டா என்ற படத்தில் நடிக்க ஆமிர்கான் முடிவு செய்தார். இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதை முடித்துவிட்டு, வேறொரு கதையில் நடிக்க அவர் திட்டமிட்டுள்ளாராம். இதனால் விக்ரம் வேதா ரீமேக்கிலிருந்து அவர் விலகியுள்ளார்.

Related Stories:

>