×

பிசாசு 2ல் பூர்ணா

சினிமா நிகழ்ச்சியில் பேசும்போதும், தனியாக ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கும்போதும் இயக்குனர் மிஷ்கின் சொல்லும் ஒரே விஷயம், ‘இதற்கு முன் நான் இயக்கிய எந்த படத்தின் 2ம் பாகத்தையும் இயக்க மாட்டேன். அதில் எனக்கு ஆர்வம் இல்லை’ என்பதுதான். அவர் இப்படி சொல்லிய தடம் மாறுவதற்குள் தனது முந்தைய படமான பிசாசு படத்தின் 2ம் பாகத்தை உருவாக்குவதாக அறிவித்தார். இதில் என்ன விசேஷம் என்றால், 2ம் பாகத்தின் கதைக்கும், முதல் பாகத்தின் கதைக்கும் சம்பந்தம் இருக்காதாம். மேலும், முதல் பாகத்தில் நடித்தவர்களை 2ம் பாகத்தில் நடிக்க வைக்க மாட்டாராம்.

தற்போது படத்தின் தொடக்க விழா பூஜை நடந்துள்ளது. அடுத்த மாதம் திண்டுக்கல் பகுதியில் அமைக்கப்பட்ட செட்டுகளில் படப்பிடிப்பு நடக்கிறது. ஆண்ட்ரியா ஹீரோயினாக நடிக்கிறார். முதல்முறையாக கார்த்திக்ராஜா இசை அமைக்கிறார். இயக்குனர் ராம், மிஷ்கின் நடித்த சவரக்கத்தி படத்தில் சுபத்ரா என்ற வேடத்தில் சிறப்பாக நடித்த பூர்ணாவை அழைத்து, பிசாசு 2 படத்தில் முக்கிய கேரக்டர் கொடுத்துள்ளனர். ஹீரோயினாக மட்டுமே நடித்து வந்த பூர்ணா, தற்போது தன் பாலிசியை தளர்த்திக்கொண்டு நடிக்கிறார்.

Tags : Purna ,
× RELATED குடிசைவாழ் மாணவிகளுக்கும்...