×

ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்த பாலா

கடந்த 21 வருடங்களில் 9 படங்கள் மட்டுமே இயக்கியுள்ளார், பாலா. சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன்-இவன், பரதேசி, தாரை தப்பட்டை, நாச்சியார், வர்மா ஆகிய படங்களில் இளையராஜா, யுவன்சங்கர்ராஜா, ஜி.வி.பிரகாஷ் குமார், ரதன் ஆகியோரை இசை அமைப்பாளர்களாக பயன்படுத்தினார். இதில் ஜோதிகா, இவானா ஆகியோருடன் ஜி.வி.பிரகாஷை ஹீரோவாக இயக்கிய நாச்சியார் என்ற படத்துக்கு இளையராஜாவை இசை அமைக்க வைத்த பாலா, தற்போது தன் ரூட்டை வேறொரு இசை அமைப்பாளருக்கு மாற்றிவிட்டார்.

ஏற்கனவே ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான சர்வம் தாள மயம் படத்துக்கு இசை அமைத்த ஏ.ஆர்.ரஹ்மான், தற்போது பாலா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படத்துக்கு இசை அமைக்க சம்மதித்துள்ளார். இந்த தகவல் மிக ரகசியமாக வைக்கப்பட்டு இருந்த நிலையில், திடீரென்று சமூக வலைத்தளங்களில் பரவ ஆரம்பித்த பிறகு பாலா மற்றும் படக்குழுவினர் இத்தகவலை மறுக்கவில்லை.

Tags : Bala ,AR Rahman ,
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை