×

வினாத்தாள் வெளியான விவகாரம் மதுரை தெற்கு தாலுகா தாசில்தார் இடமாற்றம்

மதுரை: மதுரை மாவட்டத்தில் உள்ள 11 தாலுகாக்களிலும் காலியாக உள்ள 209 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித்தேர்வு நேற்று முன்தினம்  மாவட்டத்தில் 22 மையங்களில் நடந்தது. இதில் ஆங்கில மொழிக்கான பாரா வினாத்தாள் கடந்த 3ம் தேதி இரவு வெளியானது. இந்த கேள்வித்தாள் தன்னிடம் உள்ளது; ரூ.10 ஆயிரம் கொடுத்தால், பிரதி தருவதாக ஒருவர் வீடியோவில் பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலானது.கவனக்குறைவாக இருந்ததால் மதுரை தெற்கு தாசில்தார் கல்யாணசுந்தரத்தை காத்திருப்போர் பட்டியலில் வைத்தும், அதற்கு பதிலாக முத்துப்பாண்டியை நியமித்தும் கலெக்டர் அனீஷ்சேகர் உத்தரவிட்டார்.  விரைவில் துணை ஆட்சியர் பதவிக்கான பட்டியலில் சேர இருந்தது குறிப்பிடத்தக்கது….

The post வினாத்தாள் வெளியான விவகாரம் மதுரை தெற்கு தாலுகா தாசில்தார் இடமாற்றம் appeared first on Dinakaran.

Tags : Madurai ,South ,Thaluga ,Dasildar ,Madurai South Thaluga ,Dinakaran ,
× RELATED மதுரை வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியர் ஆய்வு..!!