×

இந்து மத நம்பிக்கைக்கு எதிரானது: பிரபாஸ் படத்துக்கு தடை கேட்டு வழக்கு

பிரபாஸ் நடித்து வரும் படம் ஆதிபுருஷ். இது ராமாயணத்தை அடிப்படையாக கொண்ட படம். பெரிய பட்ஜெட்டில் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் தயாராகிறது. இதில் ராமராக பிரபாஸ் நடிக்கிறார். பாலிவுட் நடிகர் சைப் அலிகான் ராவணனாக நடிக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்திருந்த அவர், ராவணனின் மனிதாபிமானத்தை இந்த படத்தில் காட்டப்போவதாக தெரிவித்திருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. சைப் அலிகான் இந்து மதத்தை புண்படுத்துகிறார் என்ற புகார் எழுந்தது. இதற்கு சைப் அலிகான் மன்னிப்பு கேட்டார்.

இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலம் ஜான்பூரை சேர்ந்த ஹிமான்ஷு வாஸ்தவா என்ற வழக்கறிஞர் ஜான்பூர் நீதிமன்றத்தில் படத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார். ஆதிபுரூஷ் படத்தில் ராவணனாக நடிக்கும் சைப் அலிகான் இந்து மத உணர்வுகளை புண்படுத்தி வருகிறார். படமும் இந்து மத நம்பிக்கைக்கு எதிராக உள்ளது. எனவே படத்தை தடை செய்வதோடு, நடிகர் சைப் அலிகான், படத்தின் இயக்குனர் ஓம் ராவத் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளது. நீதிமன்றம் வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.

Tags : Case ,Prabhas ,
× RELATED 2வது வழக்கிலும் ஈடி விசாரணைக்கு ஆஜராகாத கெஜ்ரிவால்