சரத்குமாருக்கு கொரோனா: நடிகை கீர்த்தி சனோன், மேக்னா ராஜூக்கும் தொற்று உறுதி

படப்பிடிப்புக்கு சென்ற நடிகர் சரத்குமாருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சினிமா படப்பிடிப்புக்காக சரத்குமார், ஐதராபாத்துக்கு சென்றிருந்தார். அங்கு அவருக்கு காய்ச்சல், இருமல் ஏற்பட்டது. இதையடுத்து பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனோ தொற்று ஏற்பட்டிருப்பது உறுதியானது. இதையடுத்து ஐதராபாத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.

இது குறித்து ராதிகா சரத்குமார் டிவிட்டரில் கூறும்போது, ‘சரத்குமார் நலமாக இருக்கிறார். அவருக்கு இப்போது அறிகுறிகள் எதுவும் இல்லை. டாக்டர்கள் அவரை நன்றாக கவனித்து வருகிறார்கள். விரைவில் குணமாகி வருவார்’ என்றார்.

பாலிவுட்டில் பல படங்களில் ஹீரோயினாக நடித்தவர் கீர்த்தி சனோன். தெலுங்கில் மகேஷ்பாபு ஜோடியாக நேநோக்கடைன் படத்தில் நடித்தார். இப்போது பிரபாஸ் ஜோடியாக ஆதிபுருஷ் படத்தில் சீதையாக நடிக்க உள்ளார். படப்பிடிப்பில் பங்கேற்றபோது, அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தியதில் பாசிட்டிவ் வந்துள்ளது. இதையடுத்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

கன்னடம், தமிழ், மலையாளம் திரைப்படங்களில் நடித்தவர் நடிகை மேக்னா ராஜ். கன்னட நடிகர் சிரஞ்ஜீவி சர்ஜாவை திருமணம் செய்து கொண்டார். அவர் கர்ப்பமாக இருந்தபோது, உடல் நலக்குறைவால் கணவர் இறந்துவிட்டார். சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. மேக்னாவின் பெற்றோருக்கு கொரோனா இருந்தது. பரிசோதனை செய்ததில் மேக்னா, அவரது குழந்தைக்கும் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து வீட்டு தனிமையில் வைத்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: