×

காமன்வெல்த் பளுதூக்குதலில் தங்கம் பதக்கத்தை தந்தையின் சமாதியில் வைத்து வீராங்கனை கண்ணீர் அஞ்சலி

கந்தர்வகோட்டை : காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற பெண் தனது தந்தையின் சமாதியில் தான்பெற்ற தங்கத்தை வைத்து அஞ்சலி செலுத்தினார்.புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகில் உள்ள கல்லுகாரன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செல்லமுத்து ரீட்டா இவர்களின் மகள் லோக பிரியா (22) இவர் தந்தை சமாதியில் அஞ்சலி செலுத்தி விட்டு கூறியதாவது தனது ஆறாம் வகுப்பு படிக்கும் காலம் முதல் பளுதுக்குதல் போட்டியில் ஆர்வமுடன் கலந்து கொண்டு மாவட்டம், மாநிலம் என பளுதூக்கும் போட்டியில்  பல்வேறு பரிசுகளை பெற்று வந்த நிலையில் இந்திய அளவில் பளுதூக்கும் போட்டிக்கு தேர்வாகி நியூசிலாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் பளு தூக்குதலில் 52 கிலோ எடைப்பிரிவில் தங்கப் பதக்கம் பெற்றேன். இந்நிலையில் எனது தந்தை செல்வமுத்து திடீர் என மாரடைப்பால் இறந்து விட்டார், பளுதூக்குதலில் தங்கப் பதக்கம் பெற்ற சந்தோசம் 5 நிமிடம் கூட எனக்கு இல்லை. இந்நிலையில் தந்தை திடீர் மரணம் செய்தி கேட்டு கதறி அழுதேன். எனது முயற்சிக்கு தமிழ்நாடு பளு தூக்கும் சங்கத்தின் தலைவர் ராஜா, செயலாளர் நாகராஜன் ஆகியோரின் முயற்சியினாலும், எனக்கு பக்கபலமாக பல ஆண்டுகள் பயிற்சி வழங்கிய உடற்பயிற்சி பயிற்றுநர் ரவிச்சந்திரன் ஆகியோர் முயற்சியில் தங்கபதக்கம் பெற்றேன். மேலும் வறுமையிலும் இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளேன் என்றார். இந்நிலையில் பதக்கம் வென்ற லோக பிரியா தனது சொந்த கிராமமான கல்லுக்காரன் பட்டிக்கு வந்து கதறி அழுது தனது தந்தை சமாதியில் தான் பெற்ற பதக்கத்தினை வைத்து மலர் மாலை சாத்தி, மெழுகுவர்த்தி ஏத்தி அஞ்சலி செலுத்தினார். கிராம மக்களும், கல்லூகாரன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் முத்து மற்றும் ஊர் பொதுமக்கள் மிகுந்த சோகத்துடன் வீராங்கனையை வரவேற்றனர்.  இதுபற்றி லோகபிரியா இப்போது காமன்வெல்த் போட்டியில் தங்க பதக்கம் பெற்றுள்ளதாகவும் தங்கப்பதக்கம் பெற்றதை தனது தந்தைக்கு தெரிவிக்க முடியாமலும், தனது தந்தையின் முகத்தை கூட கடைசி வரை பார்க்க முடியாமலும் போய்விட்டது என்றார்….

The post காமன்வெல்த் பளுதூக்குதலில் தங்கம் பதக்கத்தை தந்தையின் சமாதியில் வைத்து வீராங்கனை கண்ணீர் அஞ்சலி appeared first on Dinakaran.

Tags : Commonwealth ,Gandharvakottai ,Commonwealth Games ,Puthukottai ,
× RELATED அக்கட்சிபட்டி கிராமத்தில்...