பிரபாஸ் படத்தில் சீதையாக நடிக்கிறார் கீர்த்தி சனோன்

பிரபாஸ் நடிக்கும் ஆதிபுருஷ் படத்தில் சீதை வேடத்தில் நடிக்கிறார் கீர்த்தி சனோன். தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மொழிகளில் உருவாகும் படம் ஆதிபுருஷ். இது ராமாயணம் கதையை தழுவி உருவாகிறது. பாலிவுட் டைரக்டர் ஓம்ராவத் இயக்குகிறார். ராமர் வேடத்தில் பிரபாஸ் நடிக்கிறார். ராவணன் கேரக்டரில் சைப்அலிகான் நடிக்கிறார். சீதையாக நடிப்பவர் யார் என தேர்வு நடந்து வந்தது. கேத்ரினா கைப், அனுஷ்கா சர்மா, கியரா அத்வானி உள்ளிட்டோரில் பெயர் பரிசீலனையில் இருந்தது. இந்நிலையில் கீர்த்தி சனோன், இதில் சீதை வேடத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது. தெலுங்கில் மகேஷ்பாபு ஜோடியாக நேநோக்கடைன் படத்தில் நடித்தவர் கீர்த்தி சனோன். இந்தியில் பல படங்களில் நடித்துள்ளார். அவர் முதல்முறையாக பிரபாஸ் ஜோடியாக நடிக்க உள்ளார்.

Related Stories: