ஷாருக்கான் படத்தில் சல்மான்கான்

ஷாருக்கான் நடிக்க உள்ள பாலிவுட் படம் ஒன்றில் சல்மான்கான் கவுரவ வேடத்தில் நடிக்கிறார். ஏக் தா டைகர் என்ற படத்தில் அவர் ஏற்று நடித்திருந்த டைகர் என்ற கேரக்டரில் தோன்ற உள்ளார். பாலிவுட்டில் பிரபல நடிகர்களாக இருக்கும் ஷாருக்கான், சல்மான்கான் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது. ஆனால், சமீபகாலமாக அவர்கள் நண்பர்களாக பழகி வருகின்றனர். சல்மான் கானின் டியூப் லைட் என்ற படத்தில் ஷாருக்கான் கவுரவ வேடம்ஒன்றிலும், ஷாருக்கானின் ஜீரோ என்ற படத்தில் சல்மான்கான் கவுரவ வேடத்திலும் நடித்திருந்தனர்.நீண்ட இடைவெளிக்கு பிறகு பதான் என்ற படத்தில் நடிக்கிறார், ஷாருக்கான். சித்தார்த் ஆனந்த் இயக்கும் இதில் முக்கிய வேடம்ஒன்றில் நடிக்கிறார், சல்மான்கான். இதில் நடித்து முடித்ததும், ஏக் தா டைகர் 3ம் பாகத்தில் நடிக்கிறார், சல்மான்கான்.

Related Stories:

>