ஆஷா சரத் மகள் அறிமுகம்

மலையாள நடிகை ஆஷா சரத், கேரளா மற்றும் துபாயில் நடன பயிற்சி பள்ளிகள் நடத்துகிறார். பல்வேறு மொழிகளில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். தமிழில் கமல்ஹாசன், கவுதமி நடித்த பாபநாசம் என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். அவருக்கு உதாரா, கீர்த்தனா என இரண்டு மகள்கள் இருக்கின்றனர். அனைவரும் துபாயில் வசிக்கின்றனர். தற்போது மனோஜ் கனா இயக்கும் கெட்டா என்ற மலையாள படத்தில் உதாரா ஹீரோயினாக அறிமுகமாகிறார். அவரது அம்மாவாக ஆஷா சரத் நடிக்கிறார். உதாரா பொறியியல் படித்து முடித்துள்ளார். பாரம்பரிய மற்றும் மேற்கத்திய நடனம் கற்றுள்ளார். இனி கேரளாவில் தங்கி, தொடர்ந்து சினிமாவில் நடிக்க முடிவு செய்துள்ளார்.

Related Stories:

>