திரையரங்குகளில் திரையிடப்படும் திரைப்படங்களுக்கான வி.பி.எஃப் கட்டணம் ரத்து

திரையரங்குகளில் திரையிடப்படும் திரைப்படங்களுக்கான வி.பி.எஃப் கட்டணம் ரத்து செய்யப்படுவதாக கியூப் நிறுவனம் அறிவித்துள்ளது. நவம்பர் மாதம் முழுமைக்கும் வி.பி.எஃப் கட்டணம் வசூலிக்கப்பட்ட மாட்டாது என்று கியூப் நிறுவனம் தகவல் அளித்துள்ளது. கியூப் தொழில்நுட்பத்தில் திரையிடப்படும் படங்களுக்கு விபிஎஃப் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. தயாரிப்பாளர்களால் விபிஎஃப் கட்டணம் செலுத்தப்படுவதால் அதை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. விபிஎஃப் கட்டணத்தை ரத்து செய்யாவிட்டால் புதிய படத்தை திரையிடமாட்டோம் என தயாரிப்பாளர்கள் அறிவித்திருந்தனர். வி.பி.எஃப் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் தீபாவளிக்கு புதிய திரைப்படங்கள் வெளியாக வாய்ப்புள்ளது.

Related Stories:

>