×

காதலரை பிரிந்தார் அமலா பால்

காதலரான பஞ்சாப்பை சேர்ந்த பாடகர் பவ்னிந்தர் சிங்கை பிரிந்துவிட்டார் நடிகை அமலா பால். இயக்குனர் ஏ.எல்.விஜய்யை காதலித்து மணந்தார் அமலா பால். கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் விவாகரத்து பெற்றனர். இதையடுத்து தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் அமலா பால். இந்நிலையில் பஞ்சாப்பை சேர்ந்த பாடகர் பவ்னிந்தர் சிங் என்பவரை அமலா பால் காதலித்து வந்தார்.

இவர்கள் இருவரும் சேர்ந்து வீடியோ இசை ஆல்பம் ஒன்றில் நடித்ததாக கூறப்பட்டது. அதில் பஞ்சாபி முறைப்படி இவர்கள் திருமணம் செய்யும் காட்சியும் இடம்பெற்றதாம். அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பவ்னிந்தர் சிங், தங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதாக தகவல் வெளியிட்டிருந்தார். இதை பார்த்து அமலா பால் அதிர்ச்சி அடைந்தார். இதையொட்டி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இந்நிலையில் இது தொடர்பாக பவ்னிந்தர் சிங் மீது நீதிமன்றத்தில் அமலா பால் வழக்கும் தொடர்ந்துவிட்டார். இதையடுத்து அவர் பவ்னிந்தர் சிங்கை பிரிந்துவிட்டதாகவும் மறுமணம் செய்யும் திட்டத்தை கைவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Tags : Amala Paul ,
× RELATED எனது இன்னொரு முகம் ஆடுஜீவிதம் பிருத்விராஜ் நெகிழ்ச்சி